சிரியாவிடமிருந்து உதவி பெறும் உக்ரைன் - ரஷ்யா குற்றச்சாட்டு

17 புரட்டாசி 2024 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 7074
ரஷ்யாவின் நட்பு நாடான சிரியாவிடமிருந்தே குறிப்பிட்ட உதவியை உக்ரைன் பெறுவதாக புடின் பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கொலை முயற்சியில் உக்ரைனின் பங்கு இருக்கலாம் என ரஷ்யா கூறியுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய உக்ரைன் போரில் போரிடுவதற்காக, சிரியாவிலுள்ள இஸ்லாமியவாத போராளிக்குழு ஒன்றிலுள்ளவர்களை உக்ரைன் பணிக்கமர்த்திவருவதாக ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரான Sergey Lavrov இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாஸ்கோவிலுள்ள Crocus City Hall என்னுமிடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 145பேர் உயிரிழந்த நிலையில், அந்த தாக்குதலில் பின்னணியிலும் உக்ரைனே இருப்பதாகவும் Sergey Lavrov குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் தரப்பு பிரதிநிதிகள், சிரிய போராளிக்குழுவினரை சந்தித்ததாக, துருக்கி ஊடகம் ஒன்று ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025