Rosny-sous-Bois : காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்தில் மோதி ஒருவர் பலி..!
13 புரட்டாசி 2024 வெள்ளி 15:33 | பார்வைகள் : 10794
ஸ்கூட்டர் ஒன்றில் பயணித்த ஒருவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார்.
நேற்று செப்டம்பர் 12 வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Rosny-sous-Bois (93) நகரில் இரவு 11 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி மகிழுந்து ஒன்று தப்பிச் சென்றுள்ளது. மகிழுந்தை காவல்துறையினர் துரத்திச் சென்றனர்.
தப்பிச் சென்ற மகிழுந்து, வீதியில் பயணித்த ஸ்கூட்டர் ஒன்றுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியது. ஸ்கூட்டரில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
அவர் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் எனவும், அவர் பலியானது அப்பகுதியில் பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan