Essonne : மகிழுந்து மோதி பெண் பலி.. கணவர் படுகாயம்..!
11 புரட்டாசி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 8211
பெண் ஒருவர் மகிழுந்து மோதி பலியாகியுள்ளார். மகிழுந்துக்கும் சுவற்றுக்கும் இடையே சிக்குண்டு உடல் நசுங்கி பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று செப்டம்பர் 6, வெள்ளிக்கிழமை காலை 8.50 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழுதடைந்த மகிழுந்தினை 70 வயது மதிக்கத்தக்க அதன் உரிமையாளர் திருத்திக்கொண்டிருந்த போது மகிழுந்து திடீரென இயங்கி முன்னோக்கி பயணித்ததாகவும், சுவரோடு நின்றிந்த அவரது மனைவியை மோதித்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 66 வயதுடைய அப்பெண் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கணவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் Evry நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், 'இது ஒரு விபத்து' எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan