மோசமான காலநிலை.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
6 புரட்டாசி 2024 வெள்ளி 16:18 | பார்வைகள் : 13535
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களுக்காக இந்த எச்சரிக்கை இன்று மாலை 4 மணி முதல், நாளை காலை வரை விடுக்கப்பட்டுள்ளது. Corrèze, Creuse, Dordogne, Hautes-Pyrénées and Haute-Vienne ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யலாம் எனவும், Landes மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும், Pyrénées-Atlantiques மாவட்டத்தில் மேற்குறித்த இரண்டு அனர்த்தங்களும் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களில் 80 மி.மீ தொடக்கம் அதிகபட்சமாக 120 மி.மீ வரையும் மழை பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அனர்த்தங்கள் காரணமாக ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan