நிராகரிக்கப்பட்ட motion de censure!!

9 ஐப்பசி 2024 புதன் 08:00 | பார்வைகள் : 7851
பிரதமர் Michel Barnier இன் அரசாங்கம் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரணை (motion de censure) பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் Nouveau Front populaire கட்சி இந்த நம்பிக்கை இலலா பிரேரணையை சமர்ப்பித்திருந்தது. Michel Barnier இன் அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாகவும், ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டிய இடதுசாரிகள், இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை முன் மொழிந்தார்கள்.
அதை அடுத்து, நேற்று ஒக்டோபர் 8, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றது. அதில் வெறுமனே 197 ஆதரவு வாக்குகள் மட்டுமே பதிவானது.
இதனால், நம்பிக்கை இல்லா பிரேரணை நிராகரிக்கப்பட்டது. அதனை நிறைவேற்ற குறைந்தது 289 பாராளுமன்ற உறுப்பினர்களது வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1