Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்.. 170,000 பேர் பங்கேற்பு..!

நாடு முழுவதும் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்.. 170,000 பேர் பங்கேற்பு..!

1 ஐப்பசி 2024 செவ்வாய் 16:21 | பார்வைகள் : 8450


இன்று ஒக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை நாட்டின் பல நகரங்களில் தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. மொத்தமாக 170,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

CGT, FSU மற்றும் Solidaires ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன. ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தொழிலாளர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Toulouse, Nantes, Marseille, Lyon மற்றும் Grenoble உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 170,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக CGT தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்