Paristamil Navigation Paristamil advert login

சுற்றுவட்ட வீதி : முதற்கட்டமாக ஒரு பகுதிக்கு வேகக்கட்டுப்பாடு..!

சுற்றுவட்ட வீதி : முதற்கட்டமாக ஒரு பகுதிக்கு வேகக்கட்டுப்பாடு..!

28 புரட்டாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 7256


Périphérique என அழைக்கப்படும் சுற்றுவட்ட வீதியில் வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஒக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை முதல் ஒரு பகுதியில் வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது.

Porte des Lilas தொடக்கம் Porte d'Orléans வரையான பகுதிக்கு மணிக்கு 50 கி.மீ வேகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று செப்டம்பர் 27 ஆம் திகதி பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் François Durovray இற்கும் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை அடுத்து, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் குறித்த 12 கி.மீ தூரம் உள்ள வீதிக்கு 50 கி.மீ கட்டுப்பாடும், ஏனைய பகுதிகளில் ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்