Paristamil Navigation Paristamil advert login

 சவுதி அரேபியா கூட்டத்தில்  இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்கள்

 சவுதி அரேபியா கூட்டத்தில்  இஸ்ரேலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலைவர்கள்

8 ஆவணி 2024 வியாழன் 08:39 | பார்வைகள் : 1370


ஹமாஸ் அமைப்பினை ஒழிக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு முதன்மை காரணம் இஸ்ரேல் என குற்றஞ்சாட்டியுள்ள இஸ்லாமிய நாடுகளின் உயர் மட்டத் தலைவர், இந்த விவகாரம் பிராந்தியத்தை சீர்குலைக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் முன்னெடுக்கப்பட்ட உயர்மட்ட கூட்டம் ஒன்றின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கண்டிப்பாக பதிலடி அளிக்க வேண்டும் என உறுதி பூண்டுள்ள ஈரான், தொடர்புடைய அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஈரானின் இந்த முடிவு மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுவரை ஹனியே படுகொலை தொடர்பில் இஸ்ரேல் கருத்தேதும் தெரிவிக்காமல் உள்ளது. கத்தாரில் வசித்து வந்த ஹனியே காஸா போரினை முடிவுக்கு கொண்டுவர தொடர்ந்து போராடி வந்தவர்.

ஜெத்தாவில் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசர கூட்டத்தில் கலந்துகொண்ட அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், ஹனியே கொலைக்கு முதன்மை காரணம் இஸ்ரேல் என்றே உறுதிபட கூறியுள்ளனர்.

மட்டுமின்றி, ஈரானின் இறையாண்மை மீதான கடுமையான அத்துமீறல் என்றும் தெரிவித்துள்ளனர். ஹனியே படுகொலை என்பது மத்திய கிழக்கில் நீடித்துவரும் மோதல்களை மேலும் கடுமையாக்கும் அபாயம் இருப்பதாக காம்பியாவின் வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய OIC தலைவருமான Mamadou Tangara தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் கடுமையான பதிலடி தேவை என்றே ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பும் ஹனியேவின் படுகொலைக்கு பழி தீர்க்கப்படும் என சபதமேற்றுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் 7 தாக்குதலுக்கு பின்னர் OIC முன்னெடுக்கும் முதல் கூட்டம் இதுவாகும். ஹமாஸ் படைகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,000 தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்