பரிஸ் : போலி ஒலிம்பிக் பதக்கங்களை விற்பனை செய்த ஒருவர் கைது..!
7 ஆவணி 2024 புதன் 12:40 | பார்வைகள் : 3165
போலி ஒலிம்பிக் பதக்கங்களை விற்பனை செய்த ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பார்ப்பதற்கு அச்சு அசல் ஒலிம்பிக் பதக்கங்களைப் போன்று காட்சியளிக்கும் இவை, ஒன்று €1,000 யூரோக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் இம்மாதம் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து இந்த போலி பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்கள், வெள்ளி, வெண்கல முலாம் பூசப்பட்ட 850 பதக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவருக்கு ஆறுமாத கால சிறைத்தண்டனையும், €3,750 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.