சென் நதியில் நீச்சல் மரதோன்.. திட்டமிட்டபடி நடக்கும் என பரிஸ் நகரபிதா அறிவிப்பு!
7 ஆவணி 2024 புதன் 06:29 | பார்வைகள் : 2147
சென் நதியில் 10 கிலோமீற்றர்கள் தூரம் நீந்தக்கூடிய நீச்சல் மரதோன் நிகழ்வு திட்டமிட்டபடி இடம்பெறும் என பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 8 - 9 ஆம் திகதிகளில் இந்த நீச்சல் மரதோன் இடம்பெற உள்ளது. ஆனால் சென் நதி அடுத்தடுத்து மாசடைந்து வருகிறது. நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்த பயிற்சிப்போட்டிகளும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், 10 கிலோமீற்றர்கள் தூரம் நீந்தவேண்டிய நீச்சல் மரதோன் திட்டமிட்டபடி இடம்பெறும் என பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.
'நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஆற்றை சுத்தம் செய்யமுடியாது என சொன்ன பலரிடம் நான் கூற விரும்புகிறேன்.. ஆம் நாங்கள் அதனை செய்துள்ளோம் என்பதே!' எனவும் ஆன் இதால்கோ தெரிவித்தார்.