ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பெரும் தொகை பரிசு.. வரி நீக்கமா..?!

7 ஆவணி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 7930
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெறுவோருக்கு பெரும் தொகை பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகைக்கு செலுத்தப்படவேண்டிய வருமான வரியை இரத்துச் செய்ய ஒரு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு €80,000 யூரோக்களும், வெள்ளிப்பதக்கம் வெல்வோருக்கு €40,000 யூரோக்களும், வெண்கலப்பதக்கம் வெல்வோருக்கு €20,000 யூரோக்களும் பரிசாக வழங்கப்படுகிதது. ஆனால் இந்த தொகைக்கு வருமானவரி செலுத்தவேண்டும் என்பது கட்டாயமாகும். இந்நிலையில், இந்த வரியை நீக்கம் செய்யக்கோரி கோரிக்கை வலுத்து வருகிறது.
ரீபபுளிகன் கட்சியைச் (LR) சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் Olivier Marleix இது தொடர்பில் தெரிவிக்கையில், 'சில வீரர்களுக்கு இது மிகச்சிறிய தொகையாக இருக்கலாம். ஆனால் சில வீரர்களுக்கு இந்த தொகை மிகப்பெரிய தொகை. பெரும் நம்பிக்கை ஒன்றைத் தரக்கூடியது. அதற்கு வருமானவரி பெறுவது நாட்டுக்கு அவமானமாகும். அந்த வரி முறை நீக்கப்படவேண்டும்!' என தெரிவித்துள்ளார்.
தற்போது அவரது இந்த கருத்துக்கு ஆதரவுகள் எழுந்துள்ளன.