Paristamil Navigation Paristamil advert login

 கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்கள் காசாவிடம் ஒப்படைத்த இஸ்ரேல்

 கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்கள் காசாவிடம் ஒப்படைத்த இஸ்ரேல்

6 ஆவணி 2024 செவ்வாய் 17:35 | பார்வைகள் : 1836


இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை அழிக்கும் நோக்கில் காசா மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு அதரவாக பல நாடுகளும் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தும் நோக்கில் உள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தால் காசா பகுதியில் கொல்லப்பட்ட 89 பாலஸ்தீனியர்களின் உடல்களை இஸ்ரேல் திருப்பி அனுப்பியதாக காசா அரசாங்க ஊடக அலுவலகம்  (06-08-2024) தெரிவித்துள்ளது.

முன்னர் இஸ்ரேலின் வசமிருந்த இந்த உடல்கள், தெற்கு காசா பகுதியில் உள்ள கெரெம் ஷாலோம் வழியாக சர்வதேச ரெட் கிராஸ் சங்கத்தால் வழங்கப்பட்டதாக பெயர் வெளியிடாத பாலஸ்தீனிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, வரிசை எண்கள் கொண்ட பிளாஸ்டிக் பைகளில் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன,

ஆனால் உடல்களின் தோற்றம், கொல்லப்பட்ட இடங்கள் பற்றிய எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்