பரிஸ் அருங்காட்சியகங்கள் மீது சைபர் தாக்குதல்..! - தகவல் திருட்டா..??!
6 ஆவணி 2024 செவ்வாய் 17:28 | பார்வைகள் : 2230
பரிசில் உள்ள நாற்பது வரையான அருங்காட்சியகங்கள் மீது இணையவழி சைபர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஓகஸ்ட் 3 ஆம் திகதி இரவு Grand Palais உள்ளிட்ட பரிசில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களின் இணையத்தளங்கள் மீது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும், தரவுகள் எதுவும் திருடப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் தற்போது தெரிவிக்கமுடியவில்லை எனவும் பிரான்சுக்கான இணையவழி மோசடிகளை கட்டுப்படுத்தும் அமைப்பான l'Agence nationale de la sécurité des systèmes d'information நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது இணையத்தளங்கள் மீண்டும் பெறப்பட்டுள்ளன எனவும், 36 வரையான தளங்கள் மீண்டும் புதியவகை பாதுகாப்பு கவசங்களுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் நிகழ்த்தியவர்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.