Bobigny இனைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிச் சாவு!
                    6 ஆவணி 2024 செவ்வாய் 14:43 | பார்வைகள் : 10473
Bobigny நகரைச் சேர்ந்த 17 வயதுடைய இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
Seine-et-Marne மாவட்டத்தின் Gouaix நகரில் உள்ள குளக்கரை ஒன்றில் முகாம் அமைத்து தங்கியிருந்த இளைஞர்களில் இருவரே உயிரிழந்துள்ளனர். சம்பவம் ஓகஸ்ட் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் இடம்பெற்றதாகவும், குளத்தில் இறங்கி குளிக்க முற்பட்ட இளைஞன் ஒருவர் காணாமல் போனதாகவும், அவரைக் காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்த மற்றைய இளைஞரும் நீரில் மூழ்கி மாண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலியான இரு இளைஞர்களும் Bobigny நகரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan