பரிஸ் ஒலிம்பிக் - 40 வீரர்களிற்கு கொரோனாத் தொற்று!!
6 ஆவணி 2024 செவ்வாய் 15:18 | பார்வைகள் : 2758
பரிஸ் ஒலிம்பிக் ஆரம்பத்ததில் இருந்து, ஆகக் குறைந்தது 40 வீரர்களிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளது. COVID 19 பரிசோதகைளில் இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பான OMS இன் தொற்று நோய்களிற்குப் பொறுப்பாளரான Dre Maria Van Kerkhove
«இது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் கொரோனாத் தொற்று இன்னமும் பல நாடுகளில் பெருமளவிலேயே உள்ளது»
«கொரோனாத் தொற்றிற்கான பரிசோதனைகளில் பல நாடுகளில் 10 சதவீதத் தொற்று உறுதி செய்யப்படுகின்றது. ஆனால் ஐரோப்பாவில் இது 20 சதவீதமாக உள்ளது»
என ஒலிம்பிக போட்டிகளின் ஆரம்பத்தில் ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.