Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இருந்து லெபனானுக்கு விமான சேவைகள் ரத்து..!

பிரான்சில் இருந்து லெபனானுக்கு விமான சேவைகள் ரத்து..!

6 ஆவணி 2024 செவ்வாய் 11:54 | பார்வைகள் : 1858


பரிசில் இருந்து லெபனான் தலைநகருக்கு பயணிக்கும் விமானங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக இந்த விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் - வியாழக்கிழமை காலை வரை விமானங்கள் இரத்துச் செய்யப்படுவதாகவும், மறு அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air France மற்றும்  Transavia France ஆகிய விமான நிறுவனங்கள் லெபனானுக்கு விமான சேவைகள் பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து இயக்கி வருகிறது. அவ்விரண்டு சேவைகளுமே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்