பரிஸ் : சக்கரநாற்காலியின் மின்கலன் வெடித்து தீப்பற்றியது.. ஒருவர் கவலைக்கிடம்..!
4 புரட்டாசி 2024 புதன் 13:28 | பார்வைகள் : 10190
மின்சார சக்கரநாற்காலி ஒன்றின் மின்கலன் வெடித்து, தீபரவியுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Ibis விடுதியில் இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 6.15 மணிக்கு இடம்பெற்றது. குறித்த விடுதியில் தாயும் மகளும் என இரு பெண்கள் தங்கியிருந்த நிலையில், அவரது மகள் பயன்படுத்தும் மின்சார சக்கரநாற்காலியை மின்னேற்றிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், திடீரென மின்கலன் வெடித்து தீ பரவியது. விடுதி அறையில் உள்ள பொருட்கள் வேகமாக தீப்பற்றின. இதில் அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
எவ்வாறாயினும் அவர்கள் இருவரும் வேகமாக வெளியே சென்றுள்ளனர். அவர்களை தீயணைப்பு படையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீ அணைக்கப்பட்டது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan