பிரான்சுக்கு அரசுப் பயணம் வரவிருக்கும் பாப்பரசர் லியோன் XIV!!
16 வைகாசி 2026 சனி 15:17 | பார்வைகள் : 1872
பாப்பரசர் லியோன் XIV செப்டம்பர் 25 முதல் 28 வரை பிரான்ஸுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணத்தின் போது அவர் பரிஸையும், குறிப்பாக யுனெஸ்கோ தலைமையகத்தையும் பார்வையிடுவார். முன்னாள் போப் பிரான்சிஸ் பலமுறை பிரான்ஸுக்கு சென்றிருந்தாலும், பரிஸுக்கு அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவில்லை.
வத்திக்கான் வெளியிட்ட தகவலின்படி, 2025 மே 8 முதல் பதவியில் உள்ள லியோன் XIV, பிரான்ஸுடன் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர். அவரது பாட்டி Suzanne Fontaine பிரான்ஸின் le Havre (Seine-Maritime) நகரத்தைச் சேர்ந்தவர். இதனால் இந்தப் பயணம் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபையும், குறிப்பாக அதன் தலைவர் Jean-Marc Aveline, இந்த வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி எமானுவேல் மக்ரோனும் இந்த அழைப்பை ஆதரித்து, இந்த விஜயம் நாட்டிற்கும் கத்தோலிக்கர்களுக்கும் நம்பிக்கையூட்டும் தருணமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
லியோன் XIV முன்பாக துருக்கி, லெபனான், மொனாக்கோ மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தற்போது பிரான்ஸ் பயணம் அவரது முக்கியமான வெளிநாட்டு விஜயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வருகைக்கான தகவல்களை பகிர்வதற்காக பிரான்ஸ் ஆயர்கள் மாநாடு புதிய இணையதளத்தையும் தொடங்கியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan