நாட்டை விட்டு சென்றாலும் பின் தொடரும் கடிதம்! - தபாலக வசதிகள்!
12 தை 2022 புதன் 11:41 | பார்வைகள் : 69453
கடந்த இரண்டு நாட்களாக பிரெஞ்சு தபாலகங்களில் உள்ள வசதிகள் குறித்து பார்த்து வருகின்றோம். இன்றைய பிரெஞ்சு புதினத்திலும் அது தொடர்கின்றது.
நீங்கள் தற்காலிகமாக பிரான்சை விட்டு வெளியேறி வேறு எங்கேனும் வசிக்க வேண்டிய சந்தர்ப்பம் வருகின்றது. இப்போது உங்கள் வீட்டில் எவரும் இல்லையென்றால், பூட்டிய வீட்டுக்கு கடிதம் விநியோகம் ஆகும். அல்லது உள்ளூர் தபாலங்களில் கடிதங்கள் தேங்கிவிடும்.
இப்படியான சூழ்நிலையை சமாளிக்க தபாலகத்தில் வசதி ஒன்று உள்ளது.
அதன் பெயர் réexpédition du courrier.
இந்த சேவையை பெற நீங்கள் மாதம் 33.50 யூரோக்கள் தபாலகத்துக்கு கட்டணம் செலுத்தவேண்டும். அதுவே ஆறு மாதங்களுக்கு பெற 57 யூரோக்கள் செலுத்த வேண்டும்.
இதே சேவையை தற்காலிகமாக பெற மாதம் 28 யூரோக்கள் வரை செலுத்தவேண்டும்.
இந்த கடிதங்கள் Garde du courrier மூலம், உங்களது பழைய முகவரியில் இருந்து, புதிதாக மாற்றப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மிகவும் இலகுவானது. உங்கள் உள்ளூர் தபாலகத்துக்குச் சென்று உங்கள் தற்காலிக முகவரியை கொடுத்து கட்டணம் செலுத்தவேண்டும். அவ்வளவு தான்.
இந்த சேவை பிரான்சுக்குள்ளும் செல்லுபடியாகும். பரிசில் வசிக்கும் நீங்கள் திடீரென பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு லியோனுக்கு பயணமானால், அங்கும் உங்கள் கடிதத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.
அடடே..!


























Bons Plans
Annuaire
Scan