உலகின் இரண்டாவது பெரிய வைரத்தை கண்டுபிடித்த கனேடிய நிறுவனம்!
23 ஆவணி 2024 வெள்ளி 10:24 | பார்வைகள் : 7177
உலகின் 2வது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த லுகாரா டயமண்ட் கார்ப் (Lucara Diamond Corp) நிறுவனத்தின் கெய்ரோ சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த1905ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் கல்லினன் (Cullinan) வைரத்திற்குப் பிறகு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.
போட்ஸ்வானா தலைநகர் கபரோனிலிருந்து 500 கிலோ மீற்றர் தொலைவில் Cairo சுரங்கம் உள்ளது.
முன்னதாக 2019ஆம் ஆண்டில், இதே சுரங்கத்தில் 1,758 காரட் செவாலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை பிரெஞ்சு பேஷன் நிறுவனமான Louis Vuitton வாங்கியது. எனினும், அதன் விலையை வெளியிடவில்லை.
முன்னதாக 2017ஆம் ஆண்டில், போட்ஸ்வானாவின் கெய்ரோ சுரங்கத்தில் 1,111 காரட் லெசிடி லா ரோனா வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதை ஒரு பிரித்தானிய நகைக்கடைக்காரர் ரூ.444 கோடிக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan