Paristamil Navigation Paristamil advert login

■ நால்வர் பலி... குடும்ப நிகழ்வொன்றில் சரமாரி துப்பாக்கிச்சூடு..!

■ நால்வர் பலி... குடும்ப நிகழ்வொன்றில் சரமாரி துப்பாக்கிச்சூடு..!

14 ஆடி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2660


நேற்று ஜூலை 13, சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குடும்ப நிகழ்வு ஒன்றின் போது கண்மூடித்தனமாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய பிரான்சின் Allier நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Espinasse-Vozelle எனும் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு வருகை தந்த ஒருவர், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத்தள்ளியுள்ளார். இதில் நால்வர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

விரைவாக மருத்துவ உதவிக்குழு, தீயணைப்பு படையினர், காவல்துறையினர் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு நிலமையை கட்டுப்படுத்த முயன்றனர். 

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருந்தில் பங்கேற்ற பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கான உளநல சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்