Paristamil Navigation Paristamil advert login

ஜூலை 14 நிகழ்வின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் கைது..!

ஜூலை 14 நிகழ்வின் போது தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஒருவர் கைது..!

13 ஆடி 2024 சனி 18:08 | பார்வைகள் : 4385


ஜூலை 14, நாளை இடம்பெற உள்ள தேசிய நாள் நிகழ்வின் போது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்ட நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Angers நகரில் வைத்து இக்கைது சம்பவம் இடம்பெற்றதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin, இன்று சனிக்கிழமை அறிவித்தார். கைதானவர் 18 வயது நிரம்பாத ஒருவர் எனவும், அவர் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய நாள் நிகழ்வுக்காக இன்றும் நாளையும் 130,000 காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பாக இன்னும் இரண்டுவாரங்களே உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்