Paristamil Navigation Paristamil advert login

TGV தொடருந்தில் இருந்து 1,200 பயணிகள் அவரச வெளியேற்றம்..!

TGV தொடருந்தில் இருந்து 1,200 பயணிகள் அவரச வெளியேற்றம்..!

12 ஆடி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 3210


பரிசில் இருந்து Nantes நகருக்கு பயணித்துக்கொண்டிருந்த TGV தொலைதூர தொடருந்து ஒன்று இடையில் நிறுத்தப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

Sablé-sur-Sarthe (Sarthe) நகரில் தொடருந்து நிறுத்தப்பட்டு, அதில் பயணித்த 1,200 பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தொடருந்தில்  அடையாளம் காணமுடியாத மர்மமான  வாசம் ஒன்று எழுந்ததை அடுத்து, தொடருந்து இடைநிறுத்தப்பட்டது.

'TGV 8931' இலக்க தொடருந்தே இந்த தடங்கலை எதிர்கொண்டது. அதில் பயணித்த 10 பேருக்கும் அதிகமானோருக்கு கண் எரிச்சல், உடல் ஒவ்வாமை ஏற்பட்டது. 

பின்னர் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, பயணிகள் வெளியேற்றப்பட்டு தொடருந்து சோதனையிடப்பட்டது. மாலை 6.30 மணிக்கு தடைப்பட்ட தொடருந்து, இரவு 10 மணிக்கு மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்