முன்னர் எப்போதும் இல்லாத அளவு நுழைவுச் சிட்டைகள் விற்பனையான பரிஸ் ஒலிம்பிக்..!
11 ஆடி 2024 வியாழன் 21:00 | பார்வைகள் : 4113
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், முன்னர் எப்போதும் இல்லாத அளவு நுழைவுச் சீட்டுகள் இந்த பரிஸ் ஒலிம்பிக்கில் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மற்றும் பரா- ஒலிம்பிக் இரண்டையும் சேர்த்து கிட்டத்தட்ட 10 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளுக்காக 8.6 மில்லியன் நுழைவுச் சிட்டைகளும், பரா-ஒலிம்பிக் போட்டிகளுக்காக ஒரு மில்லியன் நுழைவுச் சிட்டைகளும் விற்பனையாகியுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அதிகூடிய நுழைவுச் சிட்டைகள் விற்பனை ஒலிம்பிம் போட்டிகள் 1996 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போது8.3 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகியிருந்தது.
இம்முறை ஒலிம்பிக் போட்டிகளுக்காக 10 மில்லியன் நுழைவுச் சிட்டைகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.