ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதி..!!

11 ஆடி 2024 வியாழன் 20:00 | பார்வைகள் : 15768
ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு (élèves de CP) கல்வி உபகரணங்கள் அடங்கிய பொதி ஒன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தரிக்கோல், அடிமட்டம், பென்ஸில், அழிப்பான் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி ஒன்றே வழங்கப்பட உள்ளது. புதிய கல்வி ஆண்டில் தங்களது ஆரம்ப கல்வியை ஆரம்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இது வழங்கப்பட உள்ளதாக நேற்று ஜூலை 10 ஆம் திகதி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மக்களிடம் வாங்கும் திறன் (pouvoir d'achat) குறைவடைந்துள்ளதால் இந்த பொருட்கள் அடங்கிய பொருட்களை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.