Drancy : ஆறு பேர் சேர்ந்து ஒருவர் மீது தாக்குதல்.. நிர்வாணப்படுத்தி, படம் பிடித்தனர்...!!
11 ஆடி 2024 வியாழன் 17:05 | பார்வைகள் : 10336
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று இணைந்து நபர் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி படம் பிடித்துள்ளனர். இச்சம்பவம் தமிழர்கள் செறிந்துவாழும் Drancy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நள்ளிரவு 1.45 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற ஒருவரை வழிமறிந்த குறித்த ஆறு பேர் கொண்ட கும்பர், அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது. பின்னர் அவரை நிர்வாணமாக்கி தொலைபேசியில் படம் பிடித்துள்ளனர். அவர் மீது பெற்றோல் ஊற்றி கைகளின் ஒரு பகுதியை எரியூட்டியுள்ளனர்.
வீதியில் நடந்துசென்ற பாதசாரி ஒருவர் இந்த தாக்குதலில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவரை அங்கிருந்து தப்பிச் செல்ல வைத்துள்ளார்.
பின்னர் தப்பிச் சென்ற நபர் எரிகாயங்களுடன் பொபினியில் உள்ள Avicennes மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 93 ஆம் மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan