Essonne : வளர்ப்பு நாயைக் கொன்றுவிட்டு - கொள்ளை!!
10 ஆடி 2024 புதன் 15:01 | பார்வைகள் : 11505
வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர், வளர்ப்பு நாயைக் கொன்றுவிட்டு வீட்டைக் கொள்ளையிட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.
Saulx-les-Chartreux (Essonne) நகரில் இக்கொள்ளைச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றில் வசிக்கு நபர், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்து விட்டு காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அதன் பின்னரே அவரது வளர்ப்பு நாய் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்துள்ளார். கொள்ளையர்கள் கத்தி மூலம் அதனைக் கொன்றுள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பணம் குறித்த விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan