மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி - சூரி.
10 ஆடி 2024 புதன் 13:40 | பார்வைகள் : 1224
விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் ’விடுதலை’ படத்தில் நடித்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இருவரும் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை தங்களது சமூக வலைதளத்தில் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
’கூழாங்கல்’ என்ற விருது பெற்ற திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படத்தின் டைட்டில் லுக் வீடியோவை விஜய் சேதுபதி மற்றும் சூரி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அம்மு அபிராமி மற்றும் சேட்டன் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை பாரி இளவழகன் என்பவர் இயக்குகிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தில் இந்த டைட்டில் லுக் வீடியோவை பார்க்கும் போது ’காந்தாரா’ பாணியில் ஒரு ஆன்மீக த்ரில் படம் என்பது தெரிய வருகிறது. இந்த படம் அம்மு அபிராமியின் திரையுலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
’கூழாங்கல்’ என்ற தரமான படத்தை தயாரித்து உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை குவித்த லர்ன் அண்ட் டீச் ப்ரொடக்ஷன் என்ற நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’ஜமா’ திரைப்படமும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.