'தங்கலான்' டிரைலர் எப்படி இருக்கு...?!
10 ஆடி 2024 புதன் 13:52 | பார்வைகள் : 764
விக்ரம் நடிப்பில், ரஞ்சித் இயக்கத்தில் உருவான ‘தங்கலான்’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஆங்கிலேயர் கால கட்டத்தில் ஆன கதை, அற்புதமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள், ஜிவி பிரகாஷின் அட்டகாசமான பின்னணி இசை ஆகியவற்றோடு விக்ரமின் அபூர்வ தோற்றம் மற்றும் ஆக்சன் காட்சிகள் படத்தின் ஆவலை அதிகரித்துள்ளது.
மாளவிகா மோகனின் சூனியக்காரி கேரக்டர், தங்கம் எடுப்பதற்காக உயிரை பணயம் வைக்கும் ஏழை எளிய மக்கள், அவர்களை அடிமைப்படுத்தும் ஆங்கிலேயர்கள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ‘தங்கலான்’ இருக்கும் என்பது இரண்டு நிமிட ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளன.இந்த படத்தின் டிரைலரில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்து அறிவிப்பு இல்லை என்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.