சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்துவதில் புதிய திட்டம்
10 ஆடி 2024 புதன் 08:45 | பார்வைகள் : 2139
சுவிட்சர்லாந்தில் தற்போது, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கைகள் திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணி செய்ய வெளிநாட்டுப் பணியாளர்களைக் கொண்டு வரும் சுவிஸ் நிறுவனங்கள், ஒன்றில் ஒரு முறை செலுத்தப்படும் ஒரு கட்டணத்தைச் செலுத்தவேண்டும், அல்லது, ஆண்டொன்றிற்கு 5,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதல் 30,000 சுவிஸ் ஃப்ராக்குகள் கட்டணம் ஒன்றைச் செலுத்தவேண்டும் என்பதே சுவிஸ் அரசு முன்வைத்துள்ள திட்டம்.
இதில், வெளிநாட்டுப் பணியாளர்கள் செலுத்தவேண்டிய ஒருமுறை கட்டணம் என்பது கொஞ்சமல்ல, அது, அவர்களுடைய ஆண்டு வருவாயில் சுமார் பாதித் தொகை ஆகும்.
ஏற்கனவே இந்த திட்டம் குறித்து சுவிட்சர்லாந்தில் விவாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது, புலம்பெயர்தலுக்கெதிரான கொள்கைகள் கொண்ட கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி மீண்டும் இத்திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துவருகிறது.
ஆனால், ஏற்கனவே வர்த்தகர்கள் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.