Paristamil Navigation Paristamil advert login

ஆசையாக இருந்தது திருடினேன் - யாழில் கைதான இளைஞனின் வாக்குமூலம்

ஆசையாக இருந்தது திருடினேன் - யாழில் கைதான இளைஞனின் வாக்குமூலம்

7 ஆடி 2024 ஞாயிறு 08:47 | பார்வைகள் : 1600


மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அதனை திருடிச் சென்றேன்" என யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு குற்றத்தில் கைதான இளைஞனொருவன் பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளான் 

இதேவேளை குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிராம் 30 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர் 

கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதில்  24 வயதான சந்தேகநபரை சாவகச்சேரி பகுதியில் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் 01 கிராம் 30 மில்லிகிராம் அளவான ஹெரோயினும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது "வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அதனை திருடிச் சென்றேன்" என  சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம்  அளித்துள்ளார்.

மேலும், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்