Paristamil Navigation Paristamil advert login

 யூரோ கிண்ணம் - ரொனால்டோவின் உருக்கமான பதிவு

 யூரோ கிண்ணம் - ரொனால்டோவின் உருக்கமான பதிவு

7 ஆடி 2024 ஞாயிறு 08:56 | பார்வைகள் : 921


கடைசி யூரோ கிண்ணத்தில் தோல்வியுடன் வெளியேறியது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். 

பிரான்ஸ் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி பெனால்டி ஷூட்அவுட் முறையில், 5-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. 

இதன்மூலம் யூரோ 2024 கிண்ணத் தொடரில் இருந்து போர்த்துக்கல் வெளியேறியது. மேலும், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கடைசி யூரோ கிண்ணம் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். 

தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்த ரொனால்டோ தனது எக்ஸ் தளத்தில் உருக்கத்துடன் பதிவிட்டார். 

அதில் அவர், ''நாங்கள் இன்னும் தகுதியானவர்கள். எங்களுக்காகவும், உங்கள் ஒவ்வொருவருக்காகவும், போர்த்துக்கலுக்காகவும் நாங்கள் மேலும் விரும்பினோம்.

நீங்கள் எங்களுக்கு வழங்கிய அனைத்திற்கும், இதுவரை நாங்கள் அடைந்த அனைத்திற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.


களத்திலும் சரி, வெளியிலும் சரி இந்த மரபு கௌரவிக்கப்படும் மற்றும் தொடர்ந்து கட்டியெழுப்பப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறோம். சேர்ந்திருப்போம்'' என கூறியுள்ளார்.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்