பரிஸ் : பிள்ளைகளை ஜன்னல் வழியாக வீசிவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்.!
7 ஆடி 2024 ஞாயிறு 08:10 | பார்வைகள் : 13330
பரிசில் வசிக்கும் நபர் ஒருவர் அவரது இரு பிள்ளைகளை ஜன்னல் வழியாக தூக்கி வீசிவிட்டு, அவரும் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பரிஸ் 14 ஆம் வட்டாரத்தின் Square Auguste Renoir பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இச்சம்பவம் நேற்று ஜூலை 6, சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இரவு 8.30 மணி அளவில் அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
2 மற்றும் 5 வயதுடைய இரு சிறுவர்கள் கட்டிடத்தின் ஐந்தாவது தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் இருந்துள்ளனர். அத்தோடு, அப்பிள்ளைகளின் தந்தையும் ஜன்னல் வழியாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வரும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan