Gennevilliers : விநோத காரணத்துக்காக சிறுவன் மீது கத்திக்குத்து தாக்குதல்..!
6 ஆடி 2024 சனி 09:12 | பார்வைகள் : 11193
விநோத காரணம் ஒன்றுக்காக 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். Gennevilliers (Hauts-de-Seine) நகரில் வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாலை 6 மணி அளவில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, Boulevard Camélinat பகுதிக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 16 வயதுச் சிறுவன் ஒருவர், வீதியின் அருகே நடந்துசென்ற போது, அங்கு வருகை தந்த இரு நபர்கள், சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சிறுவர் பார்ப்பதற்கு 'மோசமான தோற்றத்தைக்' (mauvais regard) கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு இந்த தாக்குதலை மேற்கொண்டனர்.
கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்து தொலைபேசியையும் பறித்துக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றனர்.
கைகளிலும், அடிவயிற்றிலும் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், தாக்குதல் மேற்கொண்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan