51 வேட்பாளர்கள் மீது தாக்குதல்.... வார இறுதி நாட்களில் 30,000 காவல்துறையினர் குவிப்பு..!!

5 ஆடி 2024 வெள்ளி 14:03 | பார்வைகள் : 15744
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 51 வேட்பாளர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர்கள் மீது, எதிர்கட்சியி ஆதரவாளர்களாலோ, அல்லது பொது மக்களினாலோ இந்த தாக்குதல் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து, நாளை சனிக்கிழமை மற்றும் தேர்தல் இடம்பெறும் நாளான ஞாயிற்றுக்கிழமையும் பலத்த பாதுகாப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு இலக்கானவர்களில் பெரும்பாலானோர் தீவிர இடதுசாரி வேட்பாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்தம் 30,000 வீரர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1