இணையமூலமான வாக்குப்பதிவு... 460,000 பேர் வாக்களித்தனர்!
4 ஆடி 2024 வியாழன் 18:46 | பார்வைகள் : 10389
வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான இணைமூலமான வாக்குப்பதி இன்று வியாழக்கிழமை நண்பகல் ஆரம்பமாகியிருந்தது.
வெளிநாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் தங்கள் வாக்கினைச் செலுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட வசதி தான் இந்த இணையவழி வாக்குப்பதிவாகும். இந்த வாக்குப்பதிவில், 460,000 பேர் வாக்களித்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய அளவான பதிவாகும். கடந்த 2022 ஆம் ஆண்டில் 250,000 பேர் இணையம் மூலமாக வாக்களித்தும், இம்முறைத்தேர்தலின் முதலாம் சுற்றி தேர்தலில் 410,000 பேர் வாக்களித்துமிருந்தனர்.

இத்தகவலை வெளிநாட்டில் வசிக்கும் பிரெஞ்சு மக்களுக்கான இணைப்பாளர் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு அதிகரிப்பை தாம் வரவேற்பதாகவும், இந்த எண்ணிக்கை முன்னர் எப்போதும் பதிவாகாத இணையவழி வாக்குப்பதிவு எண்ணிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan