காவல்துறை வீரர் மீது ஐவர் இணைந்து தாக்குதல்..!
3 ஆடி 2024 புதன் 18:16 | பார்வைகள் : 22763
காவல்துறை வீரர் ஒருவர் மீது ஐவர் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பா-து-கலேயில் இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
கலே நகரில் பணிபுரியும் வீரர் ஒருவர், உதைபந்தாட்ட போட்டி ஒன்றை பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவரை பத்துப்பேர் கொண்ட குழு ஒன்று வழிமறித்துள்ளது. அவர்களில் ஐவர் கொண்ட குழு தாக்குதல் மேற்கொண்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தாக்குதல் இடம்பெறும் போது குறித்த காவல்துறை வீரர் கடமையில் இருக்கவில்லை எனவும், அவர் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குரிய காரணம் தெரிவிக்கப்படவில்லை.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan