Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அவதானம் 'Charcuterie' எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பக்ரீறியா தாக்கம்.

அவதானம் 'Charcuterie' எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பக்ரீறியா தாக்கம்.

2 ஆவணி 2024 வெள்ளி 12:14 | பார்வைகள் : 16675


பிரான்ஸ் முழுவதும் உள்ள Cora, Match மற்றும் Migros பிராண்ட் தயாரிப்பு 'Charcuterie' எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் 'listeria' எனும் தாக்கம் காரணமாக குறித்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொதிகள் மாசுபட்டிருக்கிறது என 'Rappel Conso' தெரிவித்துள்ளது.

200 g பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி தட்டுகளின் GTIN குறியீடு இலக்கம் 3257986914662 இலக்கத்தை உடைய உணவுப் பொருட்களே மாசுபட்டுள்ளதாகவும் அதன் காலாவதி தேதி ஆகஸ்ட் 10, 2024 எனவும் 'Rappel Conso' இணையதளம் குறிப்பிடுகிறது.

மேலும் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி தட்டுகளின்குறியீடு இலக்கம் 3257986914662 உணவுப் பொருட்கள் தற்போது திரும்ப பெறப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஏற்கனவே குறித்த உணவை உட்கொண்டவர்கள் உடலில் ஏதேனும் நோய் மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடும் படியும்  'Rappel Conso' இணையதளம் அறிவுறுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்