Aimana Abou என்னும் சிறுவனைக் காணவில்லை காவல்துறை தொலைபேசி இலக்கம் அறிவிப்பு.

2 புரட்டாசி 2023 சனி 07:51 | பார்வைகள் : 18740
Bordeaux நகரில் உள்ள rues de la capitale girondineல் கடந்த 31/08/2023 இரவு 22:00 அளவில் Aimane Abou என்னும் 10 வயது சிறுவன் காணாமல் போயுள்ளான்.
கட்டையாக வெட்டப்பட்ட கறுப்பு நிற முடி, பழுப்பு நிற கண்கள், கறுப்பு நிற காற்சட்டை, தோள்களில் சிவப்பு நிற Spiderman backpack. அணிந்திருந்தான்.
இரவு 22:00 மணியளவில் சிறுவன் Aimana Abou வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல் போனதாக அவனின் பெற்றார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மிகத் தீவிரமாக தேடப்படும் சிறுவன் இன்று 02/09 சனிக்கிழமை வரை கிடைக்காத நிலையில் காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சிறுவனைக் கண்டாலோ தகவல்கள் கிடைத்தாலோ தம்மோடு தொடர்பு கொள்ளும் படி 0800 00 49 38 என்னும் தொலைபேசி இலக்கத்தையும் வெளியிட்டுள்ளனர்.
'என்ன காரணத்திற்காக சிறுவன் இரவு வேளையில் வீட்டைவிட்டு வெளியே சென்றான்' என்பது குறித்து தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் காவல்துறை, சிறுவன் Aimana Abou காணாமல் போனது தமக்கு கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1