இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்ஜசீரா ஊடகவியலாளர்கள்

1 ஆவணி 2024 வியாழன் 08:30 | பார்வைகள் : 7841
இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் போர் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அல்ஜசீராவின் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அல்ஜசீராவின் பத்திரிகையாளர் இஸ்மாயில் அல் கௌலும் கமரா ஊடகவியலாளர் ரமி அல் ரைவும் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
மேற்குகாசாவின் சட்டி அகதிமுகாம் பகுதியில் இவர்கள் பயணித்துக்கொண்டிருந்த காரின் மீது தாக்குதல் இடம்பெற்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
அதேவேளை இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டஹமாசின் தலைவர் இஸ்மாயில் ஹனியேயின் வீட்டிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.