Paristamil Navigation Paristamil advert login

Gare de Lyon நிலையத்தில் -  திருடன் கைது

Gare de Lyon நிலையத்தில் -  திருடன் கைது

1 புரட்டாசி 2023 வெள்ளி 16:50 | பார்வைகள் : 17030


Cannes நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடியஒருவன் பரிசில் உள்ள Gare de Lyon நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளான். 

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இக்கைது சம்பவம் இடம்பெற்றது. Gare de Lyon நிலையத்துக்குள் நுழைந்த BRI காவல்துறையினர், தொடருந்தில்வந்திறங்கிய குறித்த கொள்ளையனைக் கைது செய்தனர். 

முன்னதாக புதன்கிழமை காலை Cannes நகரில் உள்ள நகைக்கடை ஒன்றுக்குள்நுழைந்த குறித்த திருடன், கைத்துப்பாக்கி ஒன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்துஅங்கிருந்து நகைகளைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தான். 

அவன் பரிசை வந்தடைந்த நிலையில், தொடருந்து நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளான். 

வர்த்தக‌ விளம்பரங்கள்