மழை பெய்வதற்கான அறிகுறி - இருந்தும் பிரமாண்டமான ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வு.

26 ஆடி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 12135
ஜூலை 26, இன்று வெள்ளிக்கிழமை பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் சில பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் மழையினால் பாதிக்கப்படுமா..?
இன்று ஜூலை 26, வெள்ளிக்கிழமை இரவு 9 மணியில் இருந்து மறுநாள் சனிக்கிழமை இரவு 9 மணி வரை பரிசில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. சில புறநகர் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை 7.30 மணியில் இருந்து ஆரம்பமாகும். பிரம்மாண்டமான பொருட்செலவில், மூன்று மணிநேரத்துக்கு மேல் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியின் போது மழையின் குறுக்கீடு இருக்கும் எனக் கூறப்பட்டுள்ள போதும் கண்கவர் நிகழ்வுகள் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025