Bobigny : வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
19 ஆடி 2024 வெள்ளி 18:06 | பார்வைகள் : 13763
நேற்று வியாழக்கிழமை Bobigny நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
5 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 58 வயதுடைய பெண் ஒருவர் இரு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில், இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் மருமகன் முறையுடைய ஒருவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
கொல்லப்பட்ட பெண் துருக்கியே நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு புதன்கிழமையே வீட்டுக்கு திரும்பியிருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan