உலகம் முழுவதும் முடங்கிய Windows - வெளியான காரணம்
19 ஆடி 2024 வெள்ளி 16:42 | பார்வைகள் : 782
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விண்டோஸ் கணினிகள் இன்று கடுமையான தொழில்நுட்ப சிக்கலால் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் Microsoftயின் Windows மென்பொருள் திடீரென முடங்கியது. இதனால் விண்டோஸ் கணினிகள் தொழில்நுட்ப சிக்கலில் மாட்டி திடீரென பணிகள் பாதிக்கப்பட்டன.
உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
இந்த நிலையில் இந்த தொழில்நுட்ப முடக்கத்திற்கான காரணத்தை Microsoft விளக்கியுள்ளது. சமீபத்திய Crowd Strike Update காரணமாக இந்த பிழை ஏற்பட்டதாக Microsoft Incயின் சேவை மையம் அறிவித்துள்ளது.
புளூ ஸ்கிரீன் ஆஃப் டெத் என்ற சிக்கல் விண்டோஸில் ஏற்பட்டது இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் Microsoft-யின் விளக்கத்தில்,
''எங்கள் Azure பின் தளப்பணியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சிக்னல் பிரச்சனை உண்டாகியிருக்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்'' என தெரிவித்துள்ளது.
Microsoft Windowsயின் முடக்கம் உலகம் முழுவதும் முக்கிய செயல்பாடுகளை முடக்கி உள்ளது. இந்தியாவில் ஒன்லைன் டிக்கெட் முன்பதிவு, Check-In மற்றும் பிற செயல்பாடுகளை பாதித்த ''தொழில்நுட்ப சவால்களை'' சந்தித்து வருவதாக SpiceJet கூறியுள்ளது.
அதேபோல், புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏர் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த இண்டிகோ போன்ற நிறுவனங்களும் இந்த முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.