பெண்களுக்கு ஏன் வெட்கத்தில் கன்னம் சிவக்கிறது தெரியுமா?
19 ஆடி 2024 வெள்ளி 14:49 | பார்வைகள் : 932
பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை. அதேவேளையில், வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.
குறிப்பாக டீன் ஏஜ் பருவம் என கூறப்படும் இளம்பெண்களுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவப்பாக மாறும். இது அவர்களின் அழகை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.
சிலருக்கு சிலரை பார்த்தால் இந்த வெட்கம் ஏற்படுகிறது. இந்த வெட்கத்தின் போது முகம் சிவப்பு நிறத்தை அடைகிறது. அது ஏன் அப்படி சிவப்பு நிறத்தை அடைகிறது என்ற ஆராய்ச்சியில் நெதர்லாந்தை சேர்ந்த அம்ஹர் டாம் பல்க லைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்: பிரசவத்தில் சிசேரியன் இறுதி நிமிடங்களில் தீர்மானிக்கப்படுகிறதா?
40 டீன் ஏஜ் பருவ இளம் பெண்களை ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். சினிமா பாடல்களை ஒளிபரப்பி அதனோடு இளம்பெண்களை பாடுமாறு கூறினார்கள். அவ்வாறு பாடும் போது அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் பாடல்களை பாடும் போது கன்னங்கள் தானாகவே சிவந்ததை கண்டனர்.
பாடல் வரிகளை கேட்டு வெட்கத்தில் பெண்களுக்கு கன்னம் சிவப்பதையும் கண்டனர். கூச்சத்தின் முக்கிய பங்கான வெட்கத்தை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.
இந்த ஆராய்ச்சியில் வெட்கத்தில் கன்னம் சிவப்பதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.