Paristamil Navigation Paristamil advert login

périmètre gris : ஒரே நாளில் 44,000 பேரிடம் பரிசோதிக்கப்பட்ட ஒலிம்பிக் பாஸ்..!

périmètre gris : ஒரே நாளில் 44,000 பேரிடம் பரிசோதிக்கப்பட்ட ஒலிம்பிக் பாஸ்..!

19 ஆடி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5311


'ஒலிம்பிக் பாஸ்' என்பது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில்  பரிசின் சில பகுதிகளுக்கு, பயணிக்கத் தேவையான அனுமதிச் சிட்டையாகும்.  காவல்துறையினர் அமைத்துள்ள 'தடையினை' தாண்டி உள்ளே நுழைய உங்களிடம் இந்த பாஸ் இருப்பது கட்டாயமானதாகும்.

நேற்று ஜூலை 18 ஆம் திகதி முதல் இந்த 'பாஸ்' நடைமுறை செயற்படுத்தப்பட்டது. சோம்ப்ஸ்-எலிசே உள்ளிட்ட அந்த பகுதிகள் "périmètre gris" என அழைக்கப்படுகிறது. 

நேற்று முதலாம் நாள், காலை 5 மணி முதல் இந்த பாஸ் பரிசோதனை செய்யப்பட்டே அப்பகுதிக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பாதசாரிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளில் மட்டுமே அப்பகுதிக்குள் நுழைய முடியும். முதல் நாளிலேயே 44,000 பேரிடம் இந்த பாஸ் பரிசோதிக்கப்பட்டது. அவர்களில் 90% சதவீனமாவர்களிடம் முறையான பாஸ் இருந்ததாகவும், ஏனைய 10% சதவீதமானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மொத்தமாக 300,000 பேர் இதுவரை இந்த பாஸ் பெற விண்ணப்பித்திருந்தார்கள்.  நேற்று ஒரே நாளில் 35,000 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்