பரிஸ் : காவல்துறை வீரர் மீது கத்திக்குத்து தாக்குதல்.. - தாக்குதலாளி சுட்டுக்கொலை!
18 ஆடி 2024 வியாழன் 18:36 | பார்வைகள் : 4427
காவல்துறை வீரர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட ஆயுததாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஜூலை 18, இன்று வியாழக்கிழமை Avenue des Champs-Élysées பகுதிக்கு அருகே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Rue Vernet வீதியும் Avenue des Champs-Elysées வீதியும் இணையும் புள்ளியில் உள்ள Louis Vuitton காட்சியறையில் இருந்து தொலைபேசி உடாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
நபர் ஒருவர் கூரான கத்தி ஒன்றின் மூலம் அங்கிருப்பவர்களை அச்சுறுத்தியதாகவும், காவல்துறையினர் சம்பவ இடத்தை வந்தடைந்த போது, அவர்களில் ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளதாகவும், அதை அடுத்து சக காவல்துறையினரால் குறித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரிஸ் நகர காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
மேற்படி செய்திகளை உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.