Paristamil Navigation Paristamil advert login

கப்ரியல் அத்தாலுடன் நீஸ் நகருக்குச் செல்லும் உள்துறை அமைச்சர் Gerald Darmanin..!!

கப்ரியல் அத்தாலுடன் நீஸ் நகருக்குச் செல்லும் உள்துறை அமைச்சர் Gerald Darmanin..!!

18 ஆடி 2024 வியாழன் 11:15 | பார்வைகள் : 3741


நீஸ் நகரில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஏழு பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


● குற்றச்செயல்..?!!

நீஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் நள்ளிரவு 2.30 மணிக்கு தீ பரவியது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இது ஒரு விபத்து சம்பவம் இல்லை எனவும், மூன்றாவது நபர் தலையீடு இருப்பதாகவும்,  தீ பரவலுக்கு முன்னதாக சில முகமூடி அணிந்து அங்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

● உள்துறை அமைச்சர் விஜயம்..!

சம்பவ இடத்துக்கு சற்று முன்னர் உள்துறை அமைச்சர் Gerald Darmanin மற்றும் முன்னாள் பிரதமர் கப்ரியல் அத்தால் ஆகிய இருவரும் பணம் மேற்கொண்டுள்ளனர்.  நண்பகல் 12.30 மணி அளவில் அவர்கள் அங்கு சென்றடைவார்கள் என அறிய முடிகிறது.

● ஜனாதிபதி இரங்கல்..!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மேற்படி தீ பரவல் சம்பவத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். "நாங்கள் அனைவரும் நீஸ் நகர மக்களின் பக்கத்தில் இருக்கிறோம். எங்கள் சிந்தனை முழுவதும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்!" என தெரிவித்தார். 

● தீயணைப்பு படையினருக்கு நன்றி!

மேற்படி தீ பரவல் சம்பவத்தில் ஏழு பேர் பலியாகியிருந்த போதும், கிட்டத்தட்ட 33 பேரின் உயிர்களை அவர்கள் காப்பாற்றியுள்ளனர். அவர்களது வேகமான, அர்ப்பணிப்பான நடவடிக்கை நன்றி தெரிவிப்பதாக நீஸ் நகர முதல்வர் Chrisian Estrosi தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்