Paristamil Navigation Paristamil advert login

மேலதிகமாக வரி செலுத்தியவர்களுக்கு - கட்டணங்கள் விரைவில் மீளளிக்கப்படும்..!!

மேலதிகமாக வரி செலுத்தியவர்களுக்கு - கட்டணங்கள் விரைவில் மீளளிக்கப்படும்..!!

17 ஆடி 2024 புதன் 17:54 | பார்வைகள் : 4741


வரி கட்டணத்தை விட அதிக தொகை செலுத்தியுள்ளவர்கள் தங்களுக்கான மேலதிக வரிப்பணத்தை விரைவில் மீளப்பெற முடியும் என  பொது நிதிகளுக்கான இயக்குனரகம் Direction générale des finances publiques (DGFiP) அறிவித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டுக்கான வரியினை செலுத்தியவர்கள், அவர்கள் செலுத்திய வரியில் மேலதிகமாக பயணம் செலுத்தப்பட்டிருந்தால் அவை மீண்டும் மக்களிடமே வழங்கப்படும். 

ஜூலை 24 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிக்குள் இந்த பணம், காசோலைகளாக வழங்கப்பட எனவும், ஓகஸ்ட் 23 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு காசோலைகள் கடிதம் மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 2023 ஆம் ஆண்டில் 15 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த தொகை மீள வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்