சிவகார்த்திகேயன் ரஜினியுடன் மோதலா?
17 ஆடி 2024 புதன் 13:46 | பார்வைகள் : 714
சூர்யாவின் ’கங்குவா’ திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டிருந்த ரஜினியின் ’வேட்டையன்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டது.
கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இதனை சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். ரஜினி படத்துடன் மோதும் அளவுக்கு நாங்கள் பெரிய ஆள் இல்லை என்றும் ’வேட்டையன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதை உறுதி செய்த பின்னால் தான் நாங்கள் அக்டோபர் 10 ஆம் தேதியை தேர்வு செய்தோம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ’அமரன்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீபாவளிக்கு ’வேட்டையன்’ ’அமரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் பிரபல நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.